HNDA கற்கையை தொடர விரும்பும் புதிய மாணவர்களுக்கான Online மூலமான விண்ணப்பித்தலும் வழிகாட்டலும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

HNDA கற்கையை தொடர விரும்பும் புதிய மாணவர்களுக்கான Online மூலமான விண்ணப்பித்தலும் வழிகாட்டலும்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் வணிகப் பிரிவில் பொருளியல் மற்றும் கணக்கீடு ஆகிய பாடங்களில் திறமைச் சித்தி உற்பட மூன்று பாடங்கள் சித்தியடைந்து கணக்கியல் துறையில் உயர் கல்வியை கற்க விரும்பும் மாணவர்களுக்காக உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தினால் (SLIATE) வணிகத்துறை பட்டத்துக்கு சமனான உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா (HNDA) கற்கை நெறிக்கான முழுநேர மற்றும் பகுதி நேர விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன . 

இம்முறை இந்த பாடநெறிக்கான விண்ணப்பங்கள் யாவும் முதன்முறையாக Online மூலமே சமர்ப்பிக்க முடியும். இந்த Online மூலமான விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிப்பதில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு மட்டக்களப்பு உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தின் HNDA மாணவர் ஒன்றியமானது அவர்களுக்குரிய விண்ணப்பங்களை Online மூலமாக பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்காகவும் குறித்த கற்கை நெறி தொடர்பான வழிகாட்டல்களை வழங்குவதற்குமான வழிகாட்டல் நிகழ்வு ஒன்றினை பின்வரும் விபரப்படி ஏற்பாடு செய்துள்ளது.

காலம் - 02.10.2020 வெள்ளிக்கிழமை 

நேரம் - காலை 8.30 மணி

இடம் - உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகம் , கோவில்குளம் , ஆரையம்பதி

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் வணிகப் பிரிவில் பொருளியல் மற்றும் கணக்கீடு ஆகிய பாடங்களில் திறமைச் சித்தி உற்பட மூன்று பாடங்கள் சித்தியடைந்து இக்கற்கை நெறியினை தொடர விரும்பும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து பயன்பெறுமாறு அன்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு - நிகழ்வுக்கு வருகை தருகின்ற மாணவர்கள் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் தங்களின் கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேற்று சான்றிதழ்களையும் பாடத்திட்ட பதிவுக்காக வைப்பிலிட வேண்டிய 500/= பணத்தினையும் கொண்டுவருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

(ஆதம்லெப்பை ஆதிப் அஹமட்)

No comments:

Post a Comment