காத்தான்குடியில் தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் பாடசாலை உணவுக்குழுவினருடன் கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

காத்தான்குடியில் தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் பாடசாலை உணவுக்குழுவினருடன் கலந்துரையாடல்

(எம்.பஹ்த் ஜுனைட்)

காத்தான்குடி பிரதேசத்தில் அதிகரித்துவரும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் தொடர்பில் பாடசாலை உணவுக்குழுவினருடனான கலந்துரையாடல் புதன்கிழமை (30) காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.எம்.நஸ்ருத்தீன், பிரதேச கல்விப்பணிப்பாளர் எம்.எம்.எம்.கலாவுதீன் மற்றும் சுகாதார அதிகாரிகள், பாடசாலை அதிபர்,ஆசிரியர், நகர சபை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment