CoPA குழு தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 23, 2020

CoPA குழு தலைவராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமனம்

அரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக, பேராசிரியர் திஸ்ஸ விதாரண எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (23) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில், 22 பேர் கொண்ட குறித்த குழுவின் முதலாவது கூட்டம் இடம்பெற்றபோது அவர் அதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண அவரது பெயரை முன்மொழிந்ததோடு, அமைச்சர் உதய கம்மன்பில அதனை வழிமொழிந்ததைத் தொடர்ந்து, குறித்த பதவிக்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்த்ககது.

இதேவேளை, நேற்று (22) இடம்பெற்ற அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (CoPE) முதலாவது கூட்டத்தில், அதன் தலைவராக பேராசிரியர் சரித்த ஹேரத் எம்.பி. நியமிக்கப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment