கார் விபத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி படுகாயம் - News View

Breaking

Post Top Ad

Sunday, September 6, 2020

கார் விபத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி படுகாயம்

கார் விபத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி படுகாயம் | Virakesari.lk
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றிரவு (05-09-2020) வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி காயமடைந்துள்ளார். 

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கிளிநொச்சி நகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தின்போது காரின் சாரதி காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு காரை செலுத்திச் சென்ற நபர் பளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எனவும் குறித்த சாரதி மது போதையில் இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad