டயமண்ட் கப்பல் தீ குறித்து விசாரிக்க இங்கிலாந்து நிபுணர்கள் குழு இலங்கை வந்தது - News View

Breaking

Post Top Ad

Sunday, September 6, 2020

டயமண்ட் கப்பல் தீ குறித்து விசாரிக்க இங்கிலாந்து நிபுணர்கள் குழு இலங்கை வந்தது

இலங்கை கடலில் நின்ற எண்ணெய் கப்பலில் தீ.. இந்திய கப்பல்களால் தீயணைப்பு.. |  India Coast Guard ships fire fighting operations on oil tanker MT New  Diamond in Sri Lanka sea. - The Subeditor Tamil
அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பரப்பில் வைத்து நியூ டயமன்ட் என்ற கப்பல் தீ விபத்துக்கு உள்ளாகியமை குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு நிபுணர்கள் குழுவொன்று வந்துள்ளது.

இன்று காலை 6.55 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் இந்த குழு மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 

எரிபொருள் சரக்குகளை இந்தியாவுக்கு கொண்டு செல்லும் போது, இலங்கை கடற்பரப்பில் திடீரென தீப்பிடித்த நியூ டயமண்ட் கப்பல் சம்பவம் குறித்து விசாரிக்க இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர் குழுவே இன்று இலங்கை வந்துள்ளது. 

பத்து நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றே விசாரணை மேற்கொள்ளவுள்ளது. கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் தலையீட்டால் பிரிட்டிஷ் மற்றும் டச்சு நிபுணர்களின் குழு வருகை தந்துள்ளது.

இந்த குழு தற்போது நியூ டயமண்ட் விசாரணைக்காக புறப்பட்டுள்ளது. மேலும், குறித்த கப்பலின் கேப்டன் மற்றும் குழுவினரிடமிருந்து அறிக்கைகள் பெறப்படவும் உள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad