மீன், வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் கண்டு பிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 23, 2020

மீன், வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் கண்டு பிடிப்பு

மன்னார் நானாட்டான் சந்திக்கு அருகில் ´வடக்கு வீதி´ என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக் குற்றிகள் சட்டி பாணை ஓட்டுத் துண்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த காணியின் உரிமையாளரினால் வீடு கட்டுவதற்கான பள்ளம் தோட்டிய போதே இந்த நாணய குற்றிகள் வெளிவந்துள்ளது.

குறித்த விடயம் நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து உப தவிசாளர் புவனம் முருங்கன் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரியிடம் குறித்த நாணயக் குற்றிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நாணயக் குற்றிகள் யாவும் மன்னார் நீதிமன்றத்தின் ஊடாக தொல் பொருள் திணைக்களத்திற்கு பாரப்படுத்தவுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லயனல் தெரிவித்தார்.

வரலாற்று நூல்களின் படி மீன் மற்றும் வாள் சின்னங்கள் பாண்டிய மன்னர்களுடைய முடியாட்சிக்கு உரியவையாக அறிய முடிகிறது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment