பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள், இறுவட்டுக்களால் நிதி வீண்விரயம் - News View

About Us

About Us

Breaking

Friday, September 11, 2020

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள், இறுவட்டுக்களால் நிதி வீண்விரயம்

பிரபாகரனின் வாழ்க்கை அடங்கிய இறுவட்டுக்கள் மீட்பு
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் மற்றும் இறுவட்டுக்களால் நிதி வீண்விரயமாகுவதுடன் சூழலுக்கும் பாதிப்பு. அதனால் இந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து கருத்து தெரிவித்தனர். 

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, புத்திக்க பத்திரண எம்.பி ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இந்த விடயங்களை சுற்றிக்காட்டினார். 

இதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் மற்றும் இறுவட்டுக்கள் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படுவதில்லை. இவை வீண்விரயமாக்கப்படுவதை நாங்கள் காண்கின்றோம். 

அத்துடன் இதற்காக பாரியளவில் நிதி செலவிடப்படுவதுடன் இறுவட்டு போன்றவையினால் சூழலுக்கும் பாதிக்கு ஏற்படுகின்றது. அதனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிக்கைகள் வழங்குவதாயின் அதனை இணையத்தளத்தினூடாக வழங்கும் நவீன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். 

அதன் மூலம் நிதி விரயமாவதை தடுக்க முடியும். யாருக்காவது இதன் பிரதிகள் தேவை என்றால் பாராளுமன்ற நூலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அதனால் இந்த நடைமுறையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

அதனைத் தொடர்ந்து எழுந்த அமைச்சர் மஹிந்த அமரவீர, புத்திக்க பத்திரணவின் கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். உறுப்பினர்களின் மேசையில் வைக்கப்படும் இறுவட்டுக்களை பாவிப்பவர்கள் மிக குறைவு. உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மடிக்கணனியில் அந்த விடயங்களை உள்வாங்கி இறுவட்டுக்கள் வழங்குவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment