இந்த வருட ஆரம்பம் முதல் நாடு முழுவதும் பல நூறு ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன - இம்ரான் - News View

About Us

About Us

Breaking

Friday, September 11, 2020

இந்த வருட ஆரம்பம் முதல் நாடு முழுவதும் பல நூறு ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன - இம்ரான்

இந்த வருட ஆரம்பம் முதல் இலங்கையில் பல நூறு ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மாடறுப்பை தடை செய்வது ஒரு தேசிய பொருளாதார பிரச்சினை. இதை முஸ்லிம்களது பிரச்சினையாக பெரும்பான்மை மக்களை நம்பவைத்து இனவாத அரசியல் செய்வதனை நாம் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த விடயத்தை வைத்து அரசாங்கம் மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றது.

வில்பத்து காடழிப்பு கோஷத்தை இனவாதமாக்கி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்ற ஜனாதிபதியும் அரசாங்கமும் மக்களை ஏமாற்றியுள்ளார்கள்.

இந்த வருடம் ஆரம்பம் முதல்,

▪️வில்பத்து பிரதேசத்தில் 100 ஏக்கருக்கும் அதிகமான பகுதியில் காடழிப்பு இடம்பெற்றது.

▪️சிங்கராஜ வனப்பகுதியில் பல ஏக்கர் காட்டுப்பகுதி துப்பரவு செய்யப்பட்டது.

▪️புத்தளம், ஆனவிளுந்தாவ பகுதியில் பல ஏக்கர் காட்டுப்பகுதி துப்பரவு செய்யப்பட்டது.

▪️புத்தளம், வண்ணாத்திவில்லு 100 ஏக்கருக்கும் அதிகமான பகுதி தீ மூட்டி எரியூட்டப்பட்டு, வனப்பகுதி துப்பரவு செய்யப்படுகிறது.

▪️ஹொரவபொத்தானை இயற்கை வனப்பிரதேசத்தில் பல ஏக்கர் வனப்பகுதி தீ மூட்டி எரியூட்டப்பட்டு, அங்கு துப்பரவாக்கல் பணி இடம்பெறுகிறது.!

இதை மறைக்க, மக்களது கவனத்தை திசை திருப்ப மாடறுப்பு தடை எனும் புதிய பிரச்சினையை அரசு கொண்டுவந்திருக்கிறது.

மரண தண்டனை மற்றும் சிறைக் கைதிகளுக்கு பாராளுமன்றம் நுழையும் சந்தர்ப்பம் வழங்கி நாட்டுக்கு அவப்பெயரை பெற்றுத்தந்த அரசின் செய்கையை மாடறுப்பு தடையால் மறைக்க முடியாது. இந்த கொஞ்ச காலத்துக்குள் நீங்கள் நாட்டை எவ்வளவு நாசமாக்கியுள்ளீர்கள் என்பதை மக்கள் கண்டுகொண்டார்கள். 

ஜனநாயகத்தை பலப்படுத்தி பாதுகாக்க எம்மால் கொண்டுவரப்பட்ட 19 வது வைத்து திருத்தத்தை நீக்கி 20 வது திருத்தம் ஒன்றை கொண்டுவந்து சர்வாதிகார ஆட்சியை இந்த நாட்டில் நடத்தும் உங்கள் எண்ணம் சாத்தியப்பட்டால் என்ன நடக்கும் என்று புத்தியுள்ள பிரஜைகள் எல்லாம் கவலைப்படுகின்றார்கள் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment