கேரளா கஞ்சா மற்றும் இரண்டு வாள்களுடன் வவுனியாவில் இளைஞன் கைது - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 1, 2020

கேரளா கஞ்சா மற்றும் இரண்டு வாள்களுடன் வவுனியாவில் இளைஞன் கைது

கேரளா கஞ்சா மற்றும் இரண்டு வாள்களுடன் வவுனியாவில் இளைஞன் கைது
கேரளா கஞ்சா மற்றும் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இளைஞர் நேற்று (31) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, மாமடு, நெடுங்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற 20 வயது இளைஞன் ஒருவரின் பொதியினை சோதனை செய்த போது 575 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதுடன், மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிஸார் கைது செய்யப்பட்ட இளைஞனை வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad