தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு! - News View

Breaking

Post Top Ad

Thursday, September 10, 2020

தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு!

கிளிநொச்சியில் இரண்டு சடலங்கள் கண்டெடுப்பு | Athavan News
கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் வைத்து இன்று (வியாழக்கிழமை) காலை சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கடந்த 4ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த 28 வயதான சுசிதரன் மற்றும் 27 வயதான தனுஷியா ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ள நிலையில் அயலவர்கள் குறித்த பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கு ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் தூங்கில் தொங்கிய நிலையில் இருந்ததை அவதானித்துள்ளனர்.

பின்னர் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலங்கை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் பட்டதாரி நியமனம் பெற்ற பெண் ஒருவரும் மற்றும் இலங்கை மின்சார சபையில் பணி புரியும் ஆண் ஒருவருமே இவ்வாறு தூங்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி நிருபர் நிபோஜன்

No comments:

Post a Comment

Post Bottom Ad