ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை விதித்தது துபாய் - News View

About Us

About Us

Breaking

Friday, September 18, 2020

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை விதித்தது துபாய்

துபாய் விமான நிலையங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்குவதற்கு 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனா ஊரடங்கால் வெளியேற முடியாமல் சிக்கி உள்ளவர்களை அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து துபாய்க்கு கடந்த 4ம் திகதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டது. அந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து துபாய் விமான நிலையங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு 15 நாட்கள் (ஒக்டோபர் 2 வரை) தடை விதிக்கப்பட்டுள்ளது.

துபாய் விமான நிலையங்களில் விமான சேவைக்கு தடை விதிக்கப்படுவது இரண்டாவது முறையாகும்.

No comments:

Post a Comment