சாய்ந்தமருதில் வாடி தீக்கிரை : கருவாடுகள் எரிந்து நாசம் - News View

Breaking

Post Top Ad

Monday, September 14, 2020

சாய்ந்தமருதில் வாடி தீக்கிரை : கருவாடுகள் எரிந்து நாசம்

நூருல் ஹுதா உமர் 

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது-15 கடற்கரை வீதியில் பெண்கள் சந்தைக்கு அருகில் அமைந்துள்ள எஸ்.எம். அலிகான் என்பவருக்கு சொந்தமான மீன் மற்றும் கருவாடு விற்பனை நிலையம் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. 

தீ உச்ச நிலையை அடைய முன்னர் அவ்விடத்தில் கூடிய பொதுமக்கள் தீயை அனைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன் மூலம் பாரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. எனினும் கடையில் இருந்த கருவாடுகள் தீக்கிரையானதுடன் கடையும், கடையில் இருந்த ஏனைய பொருட்களும் தீயில் சேதமாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad