சம்மாந்துறையில் பட்டதாரிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி - News View

About Us

About Us

Breaking

Monday, September 14, 2020

சம்மாந்துறையில் பட்டதாரிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி

ஐ.எல்.எம் நாஸிம் 

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விசேட திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான 5 மாத கால தலைமைத்துவ பயிற்சி இன்று (14) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் ஹனீபா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்பயிற்சி நெறியானது சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பட்டதாரி நியமனம் பெற்ற பட்டாதாரிகளுக்கு பொதுத்துறை, முகாமைத்துவத்துறை, தனியார்துறை மற்றும் திட்ட வேலைகள் துறை ஆகிய துறைகளில், சகல பட்டதாரி பயிலுனர்களுக்கும் மூன்று வார கால பயிற்சிகள் 05 குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் வழங்கப்படுள்ளதாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் ஹனீபா தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில், அதற்கமைய முதலாவதாக தெரிவு செய்யப்பட்ட பெண் பட்டதாரி பயிலுனர்களுக்கு அம்பாறை கொண்டவட்டுவான் இராணுவ பயிற்சிப் பாடசாலையிலும், ஆண் பட்டதாரி பயிலுனர்களுக்கு மின்னேரியா இராணுவ பயிற்சிப் பாடசாலையிலும் இரண்டாவது தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் மூன்றாவது தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு முன்னனி தனியார் நிறுவனங்களிலும் நான்காவதாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு சம்மாந்துறை பிரதேச செயலகத்திலும் ஐந்தாவதாக தெரிவு செய்யப்பட பட்டதாரி பயிலுனர்களுக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்திலும் தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இப்பயிற்சி நெறியில் அரச ஊழியர்கள் பழகிக்கொள்ளவேண்டிய பழக்க வழக்கங்கள்,இலங்கை அரச ஊழியர்கள் பற்றிய விபரம், நேரமுகாமைத்துவம் ,போன்ற பல விரிவுரைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment