மோட்டார் சைக்கிள் ஓட்டப்பந்தயமாக தலைக் கவசமின்றி பயணித்த இளைஞர் பலி - News View

About Us

About Us

Breaking

Friday, September 25, 2020

மோட்டார் சைக்கிள் ஓட்டப்பந்தயமாக தலைக் கவசமின்றி பயணித்த இளைஞர் பலி

பாறுக் ஷிஹான்

வேகமாக மோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயமாகச் சென்ற இளைஞர் குழுவின் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் இன்று (25) இடம்பெற்றது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் தலைக் கவசமின்றி வேகமாகச் சென்ற இளைஞர் குழுவில் ஒருவர் உயிரிழந்ததுடன், இவ்வாறு உயிரிழந்தவர் நிந்தவூர் 4ம் பிரிவைச் சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க நஜாத் என அடையாளங் காணப்பட்டார்.

இவ்விபத்தானது, உயிரிழந்த நபர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் அக்கரைப்பற்று பக்கமிருந்து வந்து கொண்டிருத்த போது, அதே பக்கமாக வந்த கென்டர் லொறியொன்று ஜி.பி.எஸ். சந்தியால் திரும்ப முற்பட்ட போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வந்த குறித்த மோட்டார் சைக்கிள் லொறியில் மோதுண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மறுமுனையில் வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி தூக்கி வீசப்பட்டனர்.

இதனால் மேட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் சம்ப இடத்தில் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment