14 வயதுடைய சிறுவனை துஸ்பிரயோகம் செய்த இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, September 25, 2020

14 வயதுடைய சிறுவனை துஸ்பிரயோகம் செய்த இருவர் கைது

பாறுக் ஷிஹான்

விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை அழைத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்த இருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், கல்முனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது மீன்வாடியொன்றில் இச்சம்பவம் நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளது.

மைதானமொன்றில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை மீன் தருவதாக அழைத்துச் சென்ற 27 வயதுடைய சந்தேக நபர் மற்றும் சம்பவத்தைப் பார்த்து பின் தொடர்ந்து சென்ற மற்றுமொரு 21 வயது மிக்க சந்தேகநபர்கள் இருவருமே கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய மாணவன் தற்போது கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேக நபர்கள் இருவரையும் இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment