
பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அம்பாலாங்கொடை பிரதேச கடற்றொழிலாளர்கள் 24 பேரும் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.
கடந்த பெப்ரவரி 05 ஆம் திகதி நான்கு பல நாள் மீன்பிடி கலங்களில் தொழிலுக்கு சென்ற சுமார் 24 கடற்றொழிலாளர்கள் தவறுதலாக எல்லைத் தாண்டி பங்களாதேஷ் கடற்பரப்பினுள் சென்ற நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களின் உறவினர்கள் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு கோரிக்கை முன்வைத்த நிலையிலேயே அமைச்சரினால் குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment