சிறைக்குள் ஹெரோயின் உட்பட பொருட்களை வீச முற்பட்டவர் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, September 7, 2020

சிறைக்குள் ஹெரோயின் உட்பட பொருட்களை வீச முற்பட்டவர் கைது

இந்திய மத்தியபிரதேசத்தில் திறந்தவெளி சிறை: குடும்பத்துடன் வாழ கைதிகளுக்கு  அனுமதி… – GTN
மெகசின் சிறைச்சாலையினுள் ஹெரோயின் மற்றும் கையடக்க தொலைபேசி மின்கலங்களை வீச முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையினுள் பொருட்களை வீச தயார் நிலையில் உள்ளதாக, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (06) காலை வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாலமுல்ல பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது, சிறைச்சாலையினுள் வீசுவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 02 கிராம் 725 மில்லி கிராம் ஹெரோயின், 36,000 ரூபா பணம், 10 கையடக்கத் தொலைபேசி மின்கலங்களுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு 08 ஐ சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இச்சந்தேகநபரை இன்று (07) அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, சந்தேகநபரிடம் கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad