மாகந்துரே மதூஷின் சகா ஹெரோயினுடன் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, September 10, 2020

மாகந்துரே மதூஷின் சகா ஹெரோயினுடன் கைது

திட்டமிட்ட குற்றங்களை புரியும் சந்தேகநபரான மாகந்துரே மதூஷின் நெருங்கிய சகா ‘வெலிஹிந்த கலு’ என அழைக்கப்படும் ரணவகே தம்மிக நுவன் என்பவர் வெலிகம, தெணிபிட்டிய பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (10) குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 2 கிராம் 960 மில்லிகிராம் ஹெரோயினுடன் இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதுடைய இச்சந்தேகநபர், ஊருவிட்டிய, தெணிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவர்.

மாகந்துரே மதூஷுடன் துபாயில் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டவர் என, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad