இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடுக்கும் பிரேரணை பிற்போடப்பட்டுள்ளது : கெஹெலிய ரம்புக்வெல - News View

About Us

About Us

Breaking

Thursday, September 10, 2020

இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடுக்கும் பிரேரணை பிற்போடப்பட்டுள்ளது : கெஹெலிய ரம்புக்வெல

(இராஜதுரை ஹஷான்) 

இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடுக்க பிரதமரால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும். சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை சட்டமாக்குவது ஒரு மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், இறைச்சிக்காக மாடுகளை அறுக்கும் செயற்பாட்டை தடுக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை ஆளும் கட்சி கூட்டத்தில் தனி நபர் யோசனையை முன்வைத்தார். இவ்விடயம் தொடர்பில் தற்போது அரசியல் மற்றும் சமூக தரப்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

பிரதமரால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் அதனால் மாடுகளை அறுப்பு தொடர்பான தடை சட்டம் கொண்டு வருவது ஒரு மாத காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment