மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் தினமும் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 10, 2020

மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் தினமும் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு

பாறுக் ஷிஹான்

கல்முனைப் பிராந்தியத்தில் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் தினமும் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அம்பாறை மாவட்டம், கல்முனைப் பிராந்தியத்தில் அன்றாடம் 35 க்கும் அதிகமான காட்டு யானைகள் வருகை தந்த வண்ணமுள்ளன.

கல்முனை மாநகர சபையினால் கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத் திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் தினமும் கொட்டப்படும் திண்மக்கழிவுகளினால் தொடர்மாடிக் குடியிருப்பில் வாழும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாக அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் கவலை தெரிவித்துள்ளதுடன், இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை உண்பதற்காகவே யானைகள் கூட்டமாக குடியிருப்புகளுக்குள் வருவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (8) இரவு சுமார் 15 யானைகள் குறித்த குடியிருப்புக்குள் உட்புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. கல்முனை மாநகர சபையினால் அங்கு கொட்டப்படுகின்றன. குப்பைக் கூழங்களால் பகல், இரவு நேரங்களிலும் யானைக் கூட்டம் தொடர்ந்தும் உண்பதற்காக படையெடுத்து வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. 

அது மட்டுமல்லாது, இரவு நேரங்களில் அந்த யானைக் கூட்டங்கள் தொடர்மாடி குடியிருப்புக்குள் ஊடுருவதால் மக்கள் அச்சத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அது மட்டுமல்லாது, இரவு நேரங்களிலும் அதிகாலைப் பொழுதிலும் எம் மீனவர்கள் தம் தொழிலுக்குச் செல்வதற்கு சிரமமாக இருக்கின்றது.

கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் காட்டு யானைகளால் மனித உயிர்கள் பறிக்கப்படுவதும் மனிதனால் காட்டு யானைகள் அழிக்கப்படுவதும் தொடர் கதையாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment