அமைச்சக அதிகாரிகள் மீது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

அமைச்சக அதிகாரிகள் மீது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட கொவிட்-19 வழிகாட்டுதல்களை மீறியதாக சில அமைச்சக அதிகாரிகள் மீது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சாட்டியுள்ளது. 

பயணிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதி வழங்குவதன் மூலம் சில அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளால் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை மீறிய சம்பவங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

போரா சமூகத்தின் தலைவர், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் மற்றும் மாலைத்தீவு மற்றும் சீஷெல்ஸ் நோயாளர்கள் நாட்டுக்கு வருகை தரும்போது கொவிட் வழிகாட்டுதல்களுக்கு அமைச்சு அதிகாரிகள் விலக்கு அளித்ததாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. 

இதேவேளை அமைச்சின் வழிகாட்டுதல்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட கட்டளைச் சட்டங்களை அவசியம் கடைப்பிடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

சுகாதார அமைச்சின் சரியான நேரத்தில் தலையீடு இலங்கைக்குள் கொவிட்-19 தொற்று நோயை உகந்த முறையில் கட்டுப்படுத்துவதை உறுதி செய்யும் என்றும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad