தடுப்பூசிகளுக்கு அவசர ஒப்புதல் வழங்குவது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 2, 2020

தடுப்பூசிகளுக்கு அவசர ஒப்புதல் வழங்குவது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொவிட்-19 தடுப்பூசிகளுக்கு அவசர ஒப்புதல் வழங்குவது குறித்து மிகவும் கவனமாகச் சிந்திக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா கொவிட்-19 நோய்த்தொற்றுக்கான உத்தேசத் தடுப்பூசிகளின் பயன்பாட்டைத் துரிதப்படுத்தப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.

“முழுமையான பரிசோதனைகளை முடிக்கும் முன்னர், தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்க எந்த ஒரு நாட்டிற்கும் உரிமை உள்ளது. இருப்பினும் அது சாதாரணமாகக் கருதக்கூடிய ஒன்றல்ல” என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்தார்.

பாதிப்புகளை விட நன்மைகள் அதிகமாக உள்ளன என்ற நம்பிக்கை அதிகாரிகளிடம் இருந்தால் வழக்கமான ஒப்புதல் பெறாமல் தடுப்பூசியை நோயாளிகளுக்கு வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad