ரஞ்சித் மத்தும பண்டார, ஆஷு மாரசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகினர் - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 2, 2020

ரஞ்சித் மத்தும பண்டார, ஆஷு மாரசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்

ரஞ்சித் மத்தும பண்டார, ஆஷு மாரசிங்க ஏப். 21 ஆணைக்குழுவில்-Ranjith Madduma Bandara-Ashu Marasinghe Easter Sunday Attack-PCoI
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க ஆகியோர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியிருந்தனர்.

அவர்கள் இருவரும் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (02) முற்பகல் 9.40 மணியளில் குறித்த பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியிருந்தனர்.

இந்நிலையில் ரஞ்சித் மத்தும பண்டார சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

குறித்த ஆணைக்குழுவில் கடந்த வாரம், ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் முன்னிலையாகி சாட்சியமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad