இணையத்தள ஊடகவியலாளருக்கு பிணை - வௌிநாடு செல்ல தடை - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

இணையத்தள ஊடகவியலாளருக்கு பிணை - வௌிநாடு செல்ல தடை

இணையத்தள ஊடகவியலாளர் டெஸ்மன் சத்துரங்க டி அல்விஸுக்கு பிணை வழங்கி, கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மிஹார் இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.

25,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என சந்தேக நபருக்கு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர் வௌிநாடு செல்வதற்கும் பிரதம நீதவான் தடை விதித்துள்ளார்.

விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் செயற்படும் பட்சத்தில் பிணை இரத்து செய்யப்படும் என சந்தேக நபருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 29 ஆம் திகதி மன்றிற்கு அறிக்கையிடுமாறு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் செய்தி வௌியிட்ட குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கடந்த முதலாம் திகதி சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment