உத்தேச அரசியமைப்பு யாப்பு ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் - அங்கஐன் இராமநாதன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 16, 2020

உத்தேச அரசியமைப்பு யாப்பு ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் - அங்கஐன் இராமநாதன்

19 ஆவது திருத்தச் சட்டத்தினை முற்றாக நீக்கி 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மாற்ற வேண்டியது காலத்தின் அவசியம். இதனுடாக நிறைவான ஒரு அரசியமைப்பு அபிலாசைகளை எதிர்வரும் காலங்களில் கண்டுகொள்ள முடியும் என பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் பிரதித் தலைவரும்,யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும் ஆகிய அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைமை அலுவகத்தில் பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும் ஆகிய அங்கஐன் இராமநாதன் தலைமையில் இன்று இக்கூட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த அங்கஐன் இராமநாதன், வடக்கு கிழக்கு ஆகிய மாகாணங்களில் தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியது மிக அவசியம். அதற்காக நீண்ட காலம் போராடிக் கொண்டு தான் இருந்து வருகின்றோம்.

அதற்கான உத்தேச அரசியமைப்பு யாப்பு மூலமாக தான் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம். யாப்புடைய மாற்றமும் ஒரு தீர்வு தான். இதனைவிட தமிழர்களுக்கான விவசாயிகளுக்கான தீர்வு, வீட்டுத் திட்டத்திற்கான தீர்வு, இளைஞர்களுக்கான தீர்வு, குடிநீருக்கான தீர்வு என்ற பல்வேறு தேவைப்பாடுகளும், மக்கள் அன்றாடப் பிரச்சினைகளும் காணப்படுகின்றது.

இந்த அடிப்படையிலான பிரச்சினைகளுக்கு நாங்கள் மாகாணங்களை விட எமது மாவட்டங்கள் பொருளாதார பின்னடைவினை சந்தித்துக் கொண்டு இருக்கின்றோம். அந்த விடையங்களையும் கரிசனை எடுத்துக்கொண்டு இவற்றினை ஏனைய மாகாணங்களுடான மாவட்டங்களில் முன்நிறுத்தி அதனுடாக தமிழ் மக்களின் தீர்வுத் திட்டத்தினை பெற்றுக் கொள்ள முடியும் என பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும் ஆகிய அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment