அனைத்து தரப்பினரையும் உள்ளடக்குவதற்கு தவறுவது அரசியலமைப்பின் எதிர்காலத் தோல்விக்கு வழிவகுக்கும் - கரு ஜயசூரிய - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 22, 2020

அனைத்து தரப்பினரையும் உள்ளடக்குவதற்கு தவறுவது அரசியலமைப்பின் எதிர்காலத் தோல்விக்கு வழிவகுக்கும் - கரு ஜயசூரிய

(நா.தனுஜா) 

அரசியலமைப்புத் திருத்தங்களின் உள்ளடக்கங்களைத் தயாரிக்கும் போது அது குறித்த கலந்துரையாடல்களில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்குவதற்குத் தவறுவது அரசியலமைப்பின் எதிர்காலத் தோல்விக்கு வழிவகுப்பதுடன் அதனை உருவாக்கியவர்களையே அது பிரதிநிதித்துவப்படுத்தும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார். 

முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் அவசரம் காண்பிக்கக்கூடாது என்றும், முதலில் அந்த யோசனை விரிவான கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கரு ஜயசூரிய தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். 

அதுமாத்திரமன்றி 19 வது திருத்தத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜனநாயகக் கட்டமைப்புக்கள் 20 வது திருத்தத்தின் மூலம் நீக்கப்படுவது குறித்தும் அவர் விசனம் வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். 

அரசியலமைப்புத் திருத்தங்களின் உருவாக்கம் என்பது அதனுடன் தொடர்புடைய தரப்பினர் மத்தியில் பொறுமையையும் பணிவையும் உயர்ந்தளவில் கொண்டிருக்க வேண்டிய மிகவும் கடினமானதொரு கலந்தாராய்வு செயன்முறையாகும் என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். 

அதுமாத்திரமன்றி அரசியலமைப்புத் திருத்தங்களின் உள்ளடக்கங்களைத் தயாரிக்கும் போது அதனை முன்நிறுத்திய கலந்துரையாடல்களில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்குவதற்குத் தவறுவது அரசியலமைப்பின் எதிர்காலத் தோல்விக்கு வழிவகுப்பதுடன் அதனை உருவாக்கியவர்களையே அது பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்றும் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கின்றார். 

அத்தோடு அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் காண்பித்து வருகின்ற அவசரம் ஆச்சரியம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad