ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக முஹம்மட் றியாஸ் நியமனம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக முஹம்மட் றியாஸ் நியமனம்

உதவித் திட்ட பணிப்பாளர் நியமனம்! | NewUthayan
எஸ்.எம்.எம்.முர்ஷித் 

ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகத்தின் புதிய உதவித் திட்டமிடல் பணிப்பாளராக எஸ்.ஏ.முஹம்மட் றியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் புதிய உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையைப் பொறுப்பேற்ற எஸ்.ஏ.முஹம்மட் றியாஸ் காத்தான்குடி பிரதேச செயலகத்திலிருந்து ஓட்டமாடி பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றதையடுத்து, காத்தானகுடி பிரதேச செயலகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றிய எஸ்.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஒருவர் நிரந்தரமாக நியமிக்கப்படாத நிலையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் பதில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad