ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில் அவரது உரையை கண்டித்து இந்திய பிரதிநிதி வெளிநடப்பு செய்தார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 74-வது கூட்டம் கடந்த 24ம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று பேசும்போது, காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் எழுப்பினார்
சர்வதேச சட்டபூர்வமான அடிப்படையில் ஜம்மு - காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படும் வரை தெற்காசியாவில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை இருக்காது என்றார்.
மேலும், பாதுகாப்பு கவுன்சில் ஒரு பேரழிவு மோதலைத் தடுக்க வேண்டும் என்றும், கிழக்கு திமோர் விஷயத்தில் செய்ததைப் போலவே அதன் சொந்த தீர்மானங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தியா 370 ஆவது அரசியலமைப்பு சட்டப் பிரிவை ரத்து செய்து, காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரித்ததையும் இம்ரான்கான் விமர்சித்தார்.
போர் பதற்றத்தை தூண்டும் வகையில் இம்ரான்கான் பேசியதைக் கண்டித்து இந்திய பிரதிநிதி மிஜிடோ வினிடோ பொதுச்சபை மண்டபத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இம்ரான்கானின் உரையையும் புறக்கணித்தார்.
இம்ரான்கான் பேசியது, ராஜதந்திர ரீதியாக குறைவாக இருப்பதாக ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கண்டனம் தெரிவித்தார். மேலும், இதற்கு ஐநா சபையில் பதில் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஐ.நா பொதுச்சபையில் இருந்து வெளிநடப்பு செய்த இந்திய பிரதிநிதி மிஜிடோ வினிடோ நாகலாந்தைச் சேர்ந்தவர். இதற்கு முன்பு தென்கொரியாவில் தூதராக பணியாற்றியவர்.
No comments:
Post a Comment