மட்டக்களப்பு அம்பிட்டி சுமணரத்ன தேரர் அரசாங்க அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 22, 2020

மட்டக்களப்பு அம்பிட்டி சுமணரத்ன தேரர் அரசாங்க அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்

மட்டக்களப்பில் சர்ச்சைக்குரிய தேரர் செங்கலடியிலுள்ள தொல்லியல் திணைக்கள காணியை எல்லை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால் அரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் ஊடகங்களின் முன்னிலையில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் நிலத்தை எல்லை நிர்ணம் செய்ய தாமதித்ததன் விளைவாக நிலத்தின் ஒரு பகுதி விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தன்னை சிறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பார் என தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

தேரர் ஓர் அதிகாரியிடம் கழுத்தை திருகி விடுவதாகவும் இவ்விடத்துக்கு வருமாறு உமது அதிகாரி அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிப்பதை காணொளிக் காட்சி வெளிப்படுத்தியது.

“உனது அதிகாரியை இங்கு வருமாறு சொல் அல்லது உன்னைக் கொன்று விடுவேன்” என அம்பிட்டி சுமணரத்ன தேரர் அரசாங்க அதிகாரியிடம் கூறினார்.

அந்த அதிகாரியை தேரர் தள்ளி விட்டு அவரை அறைவதற்கு முயற்சிப்பதை அக்காணொளி வெளிப்படுத்தியது.

இதேவேளை பொலிஸார் தாமதமாக அவ்விடத்துக்கு வந்த போதிலும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அவ்விடத்தை விட்டு அகல தேரர் அனுமதிக்கவில்லை.

சட்டமா அதிபரின் ஆலோசனையை தொல்லியல் திணைக்களம் பின்பற்றுவதாக தேரரிடம் பொலிஸார் கூறினர்.

இருப்பினும் தொல்லியல் தொடர்பான விடயங்களில் வழிகாட்டுதல்கைளை வழங்க சட்டமா அதிபருக்கு உரிமையில்ல எனத் தேரர் தெரிவித்தார்.

குறித்த தேரர் கடந்த காலங்களில் ஏனைய மத அங்கத்தவர்கள், அதிகாரிகளை அச்சுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தினக்குரல்

No comments:

Post a Comment