ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா - News View

About Us

About Us

Breaking

Friday, September 25, 2020

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் \ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 86 ஆயிரத்து 508 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 44 ஆயிரத்து 733 பேருக்கும், பிரேசிலில் 32 ஆயிரத்து 129 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் 10 ஆயிரத்து 653 பேருக்கும், இங்கிலாந்தில் 6 ஆயிரத்து 634 பேருக்கும், பிரான்சில் 16 ஆயிரத்து 283 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 23 லட்சத்து 94 ஆயிரத்து 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்
அமெரிக்கா - 71,84,849
இந்தியா - 57,32,519
பிரேசில் - 46,59,909
ரஷியா - 11,28,836
கொலம்பியா - 7,90,823
பெரு - 7,82,695
மெக்சிகோ - 7,10,049
ஸ்பெயின் - 7,04,209
அர்ஜெண்டினா - 6,78,266
தென் ஆப்பிரிக்கா - 6,67,049

No comments:

Post a Comment