க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 05 மாணவர்களுக்கான கருத்தரங்குகளுக்கு தடை - News View

About Us

About Us

Breaking

Friday, September 25, 2020

க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 05 மாணவர்களுக்கான கருத்தரங்குகளுக்கு தடை

இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சை சம்பந்தப்பட்ட அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர், பரீட்சை முடிவடையும் வரை முற்றிலும் தடை செய்யப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை சம்பந்தப்பட்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் ஒக்டோபர் 7ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. 

க.பொ.த. உயர்தர பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment