ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் குறித்து மகிழ்ச்சியடைவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 22, 2020

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் குறித்து மகிழ்ச்சியடைவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் குறித்து மகிழ்ச்சியடைவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

கொழும்பு பௌத்த சம்மேளனத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பேராயரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கேள்வி: ஆணைக்குழுவின் விசாரணைகள் மூலம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறீர்களா? 

பதில்: அவர்கள் இந்த விடயத்தில் உண்மையை கண்டறிய அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்களென நான் நம்புகிறேன்.

கேள்வி: ஆணைக்குழுவில் நீங்கள் கருத்து தெரிவிக்க விரும்புகின்றீர்களா?

பதில்இல்லை. ஆணைக்குழுவின் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அறிக்கைக்குப் பிறகு நாங்கள் எமது கருத்துகளை வெளியிடுவோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad