பூஸா சிறைக் கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர் - News View

About Us

About Us

Breaking

Monday, September 14, 2020

பூஸா சிறைக் கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றவாளிகள் சிலரினால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கஞ்சிப்பானை இம்ரான், பொடி லெசீ, தெமட்டகொடை சமிந்த, புளுமென்டல் சங்க, கணேமுல்ல சஞ்சீவ, ஜப்பான் சூட்டி, பறை சுதா உள்ளிட்ட பிரபல பாதாளக்குழு உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பூசா சிறைச்சாலையின் விசேட பிரிவின் 45 கைதிகள் கடந்த 10ஆம் திகதியிலிருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களில் 25 பேர் நேற்று (13) உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று (14) வரை 20 பேர் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.

கொவிட்-19 நோய் பரவல் வேளையில் உறவினர்கள் சந்திப்பதற்கு முடியாமை காரணமாக வழங்கப்பட்ட தொலைபேசி வசதிகளை நீக்கியமை, கைதிகளை சந்திப்பதற்கு வரும் சட்டத்தரணிகளை சோதனைக்கு உட்படுத்துகின்றமை, விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

No comments:

Post a Comment