சீனாவில் முதல் முறையாக வர்த்தக கண்காட்சியில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

சீனாவில் முதல் முறையாக வர்த்தக கண்காட்சியில் கொரோனா தடுப்பூசி மருந்துகள்

சீனாவில் முதல் முறையாக வர்த்தக கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள்
சீனாவில் நடந்த வர்த்தக கண்காட்சியில் அந்நாட்டின் இரு நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்துகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

உலகை ஆட்டிப்படைத்து வரும் உயிர்க்கொல்லி வைரசான கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன.

ரஷியா, இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு சோதனை நிலையில் உள்ளது. 

இந்த நிலையில் சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த வர்த்தக கண்காட்சியில் அந்நாட்டின் இரு நிறுவனங்களான சினோவக் பயோடெக் மற்றும் சினோபார்ம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்துகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

இந்த தடுப்பூசி மருந்துகள் இன்னும் பயன்பாட்டுக்கு வராத நிலையில் 3 கட்ட பரிசோதனைகள் முடிந்து இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு ஒப்புதல் கிடைத்து விடும் என அதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டு ஒன்றுக்கு 30 கோடி தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் விதத்தில் தொழிற்சாலையை கட்டி முடித்துள்ளதாக சினோவக் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad