குருநாகல் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் நன்கு பயிற்றப்பட்ட சுமார் 1200 போதைப் பொருள் வர்த்தகர்கள் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் அவர்களை கைது செய்ய பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குருநாகல் கல்வித் திணைக்களப் பணிப்பாளர் டப்ளியு.எம். பாலசூரிய தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், குருநாகல், புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் இவ்வாறு பல்வேறுபட்ட போதைப் பொருள் விற்பனையில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களின் பிரதான இலக்கு பாடசாலை மாணவர்களாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி தவறான வழிகாட்டலில் அவர்களது சதி வலையில் கடந்த 9 மாத காலத்தில் மட்டும் சுமார் 6200 மாணவர்கள் வரை சிக்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இதேவேளை, மேற்படி பிரச்சினைகளில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 100 ற்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை மாகாண கல்வி அமைச்சு நடத்தவும் போதை ஒழிப்பு மற்றும் மது பாவனையில் இருந்து விலகிச் செல்லும் வகையிலும் வழிகாட்டவும் திட்டமிடப்பட்டள்ளதாகப் குருநாகல் கல்வித் திணைக்களப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment