கந்தளாய் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஒன்பது சந்தேக நபர்களை நேற்றிரவு (23) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 95 ஆம் கட்டை மழையடிவார காட்டுப்பகுதியில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்த ஒன்பது பேரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களில் இருவர் முள்ளிப்பொத்தானை 99 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர்களென்றும், ஏனைய ஏழு பேரும் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய வேன் ஒன்றையும், மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கந்தளாய் பொலிஸாரல் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களில் சிலர் திருகோணமலை நகர சபையில் தீ அணைப்பு படை பிரிவு மற்றும் இளைஞர் படையணியில் கடமையாற்றி வருபவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment