கொரோனா மரணங்களை விட ஊரடங்கால் மரணங்கள் அதிகம் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 26, 2020

கொரோனா மரணங்களை விட ஊரடங்கால் மரணங்கள் அதிகம்

கொரோனா ஒரு பக்கம் கோரத்தாண்டவம் ஆடினாலும், மறுபக்கம் வெளியே தெரியாத மற்றொரு பிரச்சினை அமைதியாக மக்களைக் கொன்று கொண்டிருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா பரவலின் 2-வது அலையை தொடர்ந்து அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டால், கொரோனா அல்லாத வேறு பிரச்சினைகளால் சுமார் 75,000 பேர் உயிரிழக்கலாம் என 188 பக்க ரகசிய ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது.

பிரித்தானியா அரசின் அவசர கால அறிவியல் ஆலோசனைக்குழுவிடம் (Sage) ஒப்படைக்கப்பட்டுள்ள திகிலூட்டும் இந்த ஆய்வு, கொரோனா தொடர்பில் மேலும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கவிடாமல் பிரதமர் போரிஸ் ஜான்சனை அதிக அழுத்தத்திற்குள்ளாக்கியிருக்கிறது.

அந்த ஆவணம், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மட்டுமே மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் காரணமாக 16,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஒரு குண்டைத் தூக்கிப்போட்டுள்ளது.

அத்துடன், மக்கள் தொடர்ந்து விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படாவிட்டால், இன்னும் ஓராண்டுக்குள் 26,000 பேர் உயிரிழப்பார்கள் என்ற பயங்கர செய்தியையும் அது தெரிவித்துள்ளது.

மேலும், புற்றுநோய், ரத்து செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் பண மதிப்பு வீழ்ச்சி காரணமாக இன்னும் 31,900 பேர் உயிரிழக்கலாம் என்றும் அந்த ஆவணம் கூறுகிறது. 

நேற்றைய நிலவரப்படி, கொரோனாவுடன் நேரடி தொடர்புடைய மரணங்களின் எண்ணிக்கை 41,936 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment