திக்கம் பனை வள உற்பத்தி பற்றிய கலந்துரையாடலும், திக்கம் வடிசாலை நிலையத்திற்கான விஜயமும் - News View

Breaking

Post Top Ad

Monday, September 21, 2020

திக்கம் பனை வள உற்பத்தி பற்றிய கலந்துரையாடலும், திக்கம் வடிசாலை நிலையத்திற்கான விஜயமும்

திக்கம் பிரதேசத்தில் அமைந்துள்ள வடிசாலை நிலையத்தின் மீள் உருவாக்கம் பற்றிய கலந்துரையாடல் ஒன்று (18.09.2020) வெள்ளிக்கிழமை மாலை யாழ் மாவட்ட செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகார சபையில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் பனை அபிவிருத்தி அதிகார சபையின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் வட மாகாண பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜ, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் மற்றும் பனை அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களுடன் பங்கேற்றிருந்தனர்.

அதனை தொடர்ந்து திக்கம் பிரதேசத்தில் உள்ள வடிசாலை 185.2 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் மீள்கட்டுமான பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதனை கண்காணிப்பதற்காக அங்கஜன் இராமநாதன் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு முன்னேற்றங்கள் பற்றி கேட்டறிந்து கொண்டார்.

கடந்த 1 வருட காலமாக இக்கட்டுமானப் பணிகள் முன்னேடுக்கப்பட்டு வந்த நிலையில் இவ்வருடம் டிசம்பர் மாதம் அளவில் பணிகள் நிறைவுற்று மீள ஆரம்பமாகும் என நம்பப்படுகிறது. 

இவ் விஜயத்தின் போது வ டமாகாண பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராஜ, பருத்துத்துறை பிரதேச செயலகர் ஆழ்வார்பிள்ளை ஸ்ரீ அவர்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad