கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக சட்டத்தரணி என்.ஏ.எம்.அஸாம் பதவியேற்பு - News View

Breaking

Post Top Ad

Monday, September 21, 2020

கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக சட்டத்தரணி என்.ஏ.எம்.அஸாம் பதவியேற்பு

பாறுக் ஷிஹான்

கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள மருதமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி என்.ஏ.எம்.அஸாம் இன்று திங்கட்கிழமை (21) கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து, பதவியேற்றுக் கொண்டார்.

கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப், மாநகர சபையின் முன்னாள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் ஏ.ஜி.எம்.நதீர், முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.ஐ.எம்.மஸீன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை மாநகர சபையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பான உறுப்பினராகப் பதவி வகித்து வந்த தாஜுதீன் முபாரிஸ், இராஜினாமாச் செய்ததையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சட்டத்தரணி என்.ஏ.எம்.அஸாம் அக்கட்சியினால் புதிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad