'இலங்கையில் அமைதியான தீர்வொன்றை எட்டுவதற்கான ஊக்குவிப்பை தாம் வழங்கினோம்' : ஐக்கிய நாடுகள் சபை - News View

About Us

About Us

Breaking

Monday, September 14, 2020

'இலங்கையில் அமைதியான தீர்வொன்றை எட்டுவதற்கான ஊக்குவிப்பை தாம் வழங்கினோம்' : ஐக்கிய நாடுகள் சபை

(நா.தனுஜா) 

இலங்கையில் இடம்பெற்ற போரில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அமைதியான தீர்வொன்றை எட்டுவதற்கான ஊக்குவிப்பை தாம் வழங்கியதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கிறது. 

சுமார் 35,000 பேர் வரையில் பலி கொண்ட 2004 சுனாமியின் பின்னர் அதிலிருந்து மீள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பில் இளைஞர் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் தூதுவரான இலங்கையைச் சேர்ந்த ஜயத்மா விக்ரமநாயக்க நினைவு கூர்ந்திருக்கிறார். 

அதேவேளை இலங்கையில் நீண்ட காலமாக இடம்பெற்ற போரில் தொடர்புபட்டிருந்த தரப்பினரை அமைதியான தீர்வொன்றை அடைந்துகொள்ளச் செய்யும் வகையிலான ஊக்குவிப்புக்களையும் ஐக்கிய நாடுகள் சபை வழங்கி வந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருக்கிறார். 

'என்னைப் பொறுத்தவரையில் பலதரப்பு நம்பிக்கை என்பது நம்பிக்கை, வாய்ப்பு மற்றும் தனி மனித கௌரவம் என்பவற்றை மையப்படுத்தியதாகும். அதனடிப்படையிலேயே உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவியளித்து வருகின்றது' என்றும் ஜயத்மா விக்ரமநாயக்க தெரிவித்திருக்கிறார். 

எனினும் இலங்கையில் நடைபெற்ற மூன்று தசாப்தகாலப் போரின் போது பெருமளவான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டதாக பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment