எல்ல - வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பஸ்ஸின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 04ஆம் திகதி இரவு, சுற்றுலா சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பஸ், எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் 24ஆவது மைல்கல் பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் தங்காலை நகரசபையின் செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன உட்பட 12 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த 17 பேர் பதுளை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment