நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 1, 2020

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள்

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் துண்டிப்பு –(படம்) -  NewMannar நியூ மன்னார் இணையம்
தற்போது நிலவும் வரட்சியான காலநிலையத் தொடர்ந்து, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நீர் நிலைகள் வற்றிய நிலையில் காணப்படுவதால், நீர் விநியோகத்தை மட்டுப்படுத்தவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்களாக வழங்கப்பட்டு வரும் நீர் விநியோகம் இச்சூழ்நிலைலயில் மட்டுப்படுத்தப்படவுள்ளதோடு, மலைப்பாங்கான பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும், அச்சபை அறிவித்துள்ளது.

கடினமான இத்தருணத்தில் சிக்கனமாக நீரை பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மேலதிக தகவல்களுக்காக அவசர தொடர்பு நிலையத்துடன் (1939) தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad