திகதி அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என்கிறார் மஹிந்த தேசப்பிரிய - News View

About Us

About Us

Breaking

Sunday, September 20, 2020

திகதி அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என்கிறார் மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரமும் கிடையாது எனவும் தேர்தலை துரிதமாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்து தேர்தலை நடத்த முடியும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மாகாண சபைத் ​தேர்தல் தாமதமடைவதற்கு எதிராக ஆளும் தரப்பு எம்.பிகள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம் கூட நடத்தினார்கள்.

எனவே தேர்தலை துரிதமாக நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பில் எமக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றும் கூறினார்.

மாகாண சபைத் தேர்தல் 3 வருடங்களுக்கு மேலாக நடத்தப்படாதுள்ளது தெரிந்ததே. மாகாண சபைத் தேர்தல் சட்டம் மாற்றப்பட்டுள்ள நிலையில் பழைய முறையில் தேர்தல் நடத்துவதாக இருந்தால் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment