ஹட்டன் செம்புவத்த தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க அமைச்சர் ஜீவன் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, September 12, 2020

ஹட்டன் செம்புவத்த தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க அமைச்சர் ஜீவன் நடவடிக்கை

ஹட்டன் செம்புவத்த தோட்ட தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நேற்று (12.09.2020) நடவடிக்கை எடுத்துள்ளார். 

சம்பளப் பிரச்சினை, கொழுந்து நிலுவை, வெளி ஆட்கள் தோட்ட வேலைக்கு வருதல் உட்பட மேலும் சில விடயங்களை மையப்படுத்தி ஹட்டன், செம்புவத்த தோட்ட தொழிலாளர்கள் கடந்த இரு நாட்களாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். நேற்றும் வேலைக்கு செல்லவில்லை. 

இந்நிலையில் செம்புவத்த தோட்டத்துக்கு நேற்று நேரில் பயணம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது தொழிலாளர்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துரைத்ததுடன், தீர்வுகளை பெற்றுத்தருமாறும் கோரினர். 

இதனையடுத்து செம்புவத்த தோட்டத்துக்கு உரித்தான நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுடன் ஜீவன் தொண்டமான் பேச்சுவார்த்தை நடத்தினார். தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்க, மக்கள் போராட்டத்தை ஜீவன் தொண்டமான் வெற்றிகரமாக நிறைவுசெய்து வைத்தார்.

இதன்படி தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட நாட்களுக்கு முழு பெயர் வழங்குவதற்கும், குறித்த தோட்டத்திலுள்ள தலைவர்களின் அனுமதியுடனேயே வேறு தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வருவதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment