இன்று முதல் வீதி ஒழுங்கை சட்டத்தை மீறுகின்ற சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, September 28, 2020

இன்று முதல் வீதி ஒழுங்கை சட்டத்தை மீறுகின்ற சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இன்று முதல் வீதி ஒழுங்கை சட்டத்தை மீறுகின்ற சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதன்படி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்தின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.

இதற்கிடையில், கொழும்பு நகரில் வீதிகளில் சமிக்ஞை முறையைப் புதுப்பிப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண சிறப்பு திட்டம் இன்று ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், வீதி ஒழுங்கை சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற பகுதிகளிலுள்ள வீதி சமிக்ஞை மின் விளக்குகள் இன்றையதினம் ஆராயப்படவுள்ளதாக பொலிஸ் போக்கு வரத்து தலைமையகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

குறித்த வீதி சமிக்ஞை மின் விளக்குகளின் தரவுகள் பெறப்பட்டு அதிக வாகனங்கள் பயணிக்கும் வீதிகளுக்கு அதிக காலமும் குறைந்தளவு வாகனங்கள் பயணிக்கும் வீதிகளுக்கு குறைந்த காலமும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

கொழும்பையும், அதனை அண்மித்த நகரங்களிலும், பிரதான 4 வீதிகளை மையமாகக் கொண்டு, காலை 6 மணி தொடக்கம் காலை 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், இந்த வீதி ஒழுங்கை சட்டம் கடந்த 14 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வீதி ஒழுங்கை சட்டம் அமுல்படுத்தப்பட்டு முதல் இரண்டு வாரங்களுக்கு விதிமுறைகளை மீறுகின்ற சாரதிகளுக்கு எதிராக அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் என்பன மேற்கொள்ளப்படவில்லை.

எனினும் இன்று முதல் வீதி ஒழுங்கை சட்டத்தை மீறுகின்ற சாரதிகளுக்கு எதிராக அபராதம் மற்றும் சட்ட நவடிக்கைகள் என்பன மேற்கொள்ளப்படுமென பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரி வித்தார்.

No comments:

Post a Comment