
(எம்.ஆர்.எம்.வஸீம்)
தேசிய நீர் வழங்கல் சபையில் காணப்படுகின்ற ஊழியர், மாணி வாசிப்பாளர் போன்ற பதவிலுக்கான ஆட்சேர்ப்புக்களின் போது மனித வள நிறுவனங்கள் மூலம் சேவையில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என நீர் வளங்களை பாதுகாக்கும் பாவனையாளர் அமைப்பின் தலைவர் தினுஷ்க த சோயக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய நீர் வழங்கல் சபையில் காணப்படுகின்ற ஊழியர், மாணி வாசிப்பாளர் போன்ற பதவிலுக்கான ஆட்சேர்ப்புக்களின் போது எதிர்காலத்தில் மனித வள நிறுவனங்கள் மூலம் சேவையில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என தேசிய நீர் வழங்கல் சபையின் மேலதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
நீர் வழங்கல் சபையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு மனித வள நிறுவனங்கள் ஊடாக கடந்த காலங்களில் ஆட்சேர்ப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
முறையற்ற முறையில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சின் அனுமதியின்றி தனியார் மனித வள நிறுவனங்கள் ஊடாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியற்றவர்கள் கடந்த காலத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
தற்போதைய அரசின் சௌபாக்கியமான நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டில் முன்னைய தவறுகள் இடம்பெறாது தேசிய நீர் வழங்கல் சபையில் காணப்படுகின்ற ஊழியர், மாணி வாசிப்பாளர் வெற்றிடங்களுக்கு நீர் வழங்கல் அமைச்சின் பரீட்சை மூலம் இடம்பெற உள்ளது.
இதன் மூலம் நாட்டு மக்களுக்கு சிறந்த நீர் வழங்கல் சேவையை வழங்க முடிவதுடன் தகுதியானவர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறும்.
No comments:
Post a Comment