சீனா கடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 16, 2020

சீனா கடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

சீனா தனது 2வது கடல் ஏவுதளத்தில் இருந்து ரொக்கெட் மூலமாக 9 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

சீனாவின் ஜிலின் மாகாணம் சாங்சுன் நகரில் மஞ்சள் கடல் பகுதியில் சீனா தனது 2வது கடல் ஏவுதளத்தை அமைத்துள்ளது. நேற்று இந்த ஏவுதளத்தில் உள்ள ஒரு கப்பலில் இருந்து ரொக்கெட் ஒன்றை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்த ரொக்கெட்டில் 9 செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

லாங் மார்ச் 11 கேரியர் ராக்கெட், 3 வீடியோ செயற்கைக் கோள்கள், 6 புஷ்புரூம் செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. தலா 42 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக் கோள்கள் வேளாண்மை, வனவியல் நில வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் தொலைநிலை உணர்திறன் சேவைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த 6 செயற்கைக் கோள்களும் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனா விண்ணுக்கு அனுப்பிய செயற்கைகோள் ஒன்று சுற்றுவட்ட பாதையில் நுழையாமல் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad