சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெறாத 310 ஊழியர்கள் துறைமுக அதிகார சபையில் என்கிறார் அமைச்சர் ரோஹித - News View

Breaking

Post Top Ad

Thursday, September 10, 2020

சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெறாத 310 ஊழியர்கள் துறைமுக அதிகார சபையில் என்கிறார் அமைச்சர் ரோஹித

முடிந்தால் பொதுத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள் : ரோஹித அபேகுணவர்தன சவால் -  News View
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெறாத 310 ஊழியர்களை இலங்கை துறைமுக அதிகார சபை (எஸ்.எல்.பி.ஏ) பணிக்கமர்த்தியுள்ளதாக துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். 

நேற்று பாராளுமன்றத்தில் பேசிய அமைச்சர், கடந்த அரசு பதவியில் இருந்தபொழுது இந்த ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளது. இந்த ஊழியர்களை அடுத்து என்ன செய்வது என்ற பிரச்சினைக்கு அரசாங்கம் முகங்கொடுத்துள்ளது. 

சாதாரண தரப் பரீட்சையில் தோல்வியுற்ற ஊழியர்களைப் பற்றி நாங்கள் அடுத்து என்ன முடிவு எடுக்க வேண்டும்?" என கேள்வியெழுப்பினார். 

முன்னாள் அரசாங்கத்தின் மோசமான நிர்வாகத்தின் விளைவாக, சாதாரண தரப் பரீட்சை கூட சித்தியடையாத இளைஞர்கள் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். முன்னாள் அரசு செய்த அதே தவறுகளை புதிய அரசு செய்யாது என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad