2021 ஆம் ஆண்டுக்கு 315 கோடி ரூபா செலவில் 3.94 கோடி பாடப் புத்தகங்கள் அச்சீடு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 10, 2020

2021 ஆம் ஆண்டுக்கு 315 கோடி ரூபா செலவில் 3.94 கோடி பாடப் புத்தகங்கள் அச்சீடு

2021 இல் ரூ. 315 கோடி செலவில் 3.94 கோடி பாடப் புத்தகங்கள்-School Text Book Printing for Year 2021-Cabinet Approval
2021 ஆம் ஆண்டுக்கான இலவசப் பாட நூல் விநியோகத்திற்கான 400 வகையான நூல்களை அச்சிட ரூபா. 315 கோடி (ரூ. 3152.72 மில்லியன்) செலவிடப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

3.94 கோடி (39,431,500) பாடப்புத்தகங்கள் அச்சிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிரந்தர பெறுகைக் குழுவின் சிபாரிசுகளுக்கமைய 106 வகை பாட நூல்களின் 1.38 கோடி (13,890,000) பிரதிகளை ரூபா 1,093.71 மில்லியன் செலவில் அரச அச்சகக் கூட்டுத்ததாபனத்தின் மூலமும் மேலும் 294 வகை பாட நூல்களின் 2.5 கோடி (25,541,500) பிரதிகளை ரூபா 2059.01 மில்லியன் செலவில் திறந்த பெறுகைக் கோரல் முறை மூலம் தெரிவு செய்யப்பட்ட தனியார் அச்சு நிறுவனங்கள் மூலமும் அச்சிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த யோசனை அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment