
(செ.தேன்மொழி)
இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதாக அரசாங்கம் தெரிவித்தாலும், இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்தார்.
இதேவேளை நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்திலேயே மாகாண சபைத் தேர்தல் முறை உருவாக்கப்பட்டது.
தற்போது தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா? இல்லை. எனவே மாகாண சபை முறையை பின்பற்றுவதுடன், அனைத்து மாகாணங்களுக்கும் சமமான அதிகாரத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment